‘ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருசம் காத்திருந்தேன்’ என ’ஐயா’ திரைப்படத்தில் ஆடிப் பாடி அறிமுகமான நயன்தாரா அதன்பின் நிகழ்த்தியவை எல்லாம் தமிழ் சினிமா வரலாறானது. ’கொஞ்ச நேரம் கொஞ்சி பேசக் கூடாதா’ என கேட்க வைத்தது ரஜினிகாந்தின் சந்திரமுகி. பின்பு ‘கஜினி’ ‘கள்வனின் காதலி’, ‘வல்லவன்’, ‘தலைமகன்’, ‘ஈ’, ‘பில்லா’, ‘சத்யம்’ , ‘வில்லு’, ‘ஏகன்’ என ஏகத்திற்கும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னி ஆனார் நயன்தாரா.
2022 ஜூன் 9 அன்று இருவருக்கும் திருமணம் என வந்த செய்தியால் கோலிவுட்டில் திருவிழா களை கட்டியது. சினிமா நட்சத்திரங்கள் புடை சூழ மெஹந்தி வைபவத்தோடு ஆரம்பித்து மத்தாப்பு சிரிப்புடன் மங்கல நாண் பூட்டும் நிகழ்வோடு முடிவடைந்தது இந்த சேர நாட்டு இளவரசியின் திருமணம். தமிழ்நாட்டின் மருமகளான இந்த கேரள நாட்டு தேவதையை ‘ மணக்கோலம் கொண்ட மகளேபுது மாக்கோலம் போடு மயிலே’என மலர் தூவி வரவேற்றது தமிழ்நாடு.