தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நயன்தாரா வலம் வருகிறார்.தற்போது தீபாவளிக்கு வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.அதோடு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘ காத்து வாக்குல இரண்டு காதல்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
2/ 5
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன் நடித்த நானும் ரவுடி தான் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது..இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகுந்த வெற்றி பெற்றது. பின்பு விக்கி மற்றும் நயன் காதலிப்பதாக அறிவித்தனர்.
3/ 5
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று அங்கு ஒன்றாக நேரத்தை செலவிடுவார்கள்.அப்போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.
4/ 5
அந்த வகையில் தற்போது சீரடி கோயில் மற்றும் மும்பையில் இருக்கும் பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5/ 5
மேலும் மும்பை ரோட்டு கடையில் நயன்தாரா, கடைக்காரரிடம் பேரம் பேசி வாங்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.