திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கேரளாவைச் சேர்ந்த இவர், ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். அதோடு விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படமும் நயன்தாராவின் கைவசம் உள்ளது. கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். அவ்வப்போது இவர்கள் வெளியூர்களுக்கு செல்லும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களிடம் லைக்ஸை குவிக்கும். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கல்ந்துக் கொண்ட நயன்தாரா தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த விஷயத்தை கூறினார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக சுவாமி தரிசனத்துக்கு அவர்கள் சென்றனர். சுவாமி தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில்தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வெளியே வந்த அவர்கள் ரசிகர்கள் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.