முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மக்களை பிளவுபடுத்தும் படத்தை உருவாக்கக்கூடாது - 'தி கேரளா ஸ்டோரி' குறித்து பேட்ட வில்லன் கருத்து!

மக்களை பிளவுபடுத்தும் படத்தை உருவாக்கக்கூடாது - 'தி கேரளா ஸ்டோரி' குறித்து பேட்ட வில்லன் கருத்து!

மக்களை பிளவுபடுத்தும் படத்தை உருவாக்கக்கூடாது என 'தி கேரளா ஸ்டோரி' குறித்து பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திகி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 • 15

  மக்களை பிளவுபடுத்தும் படத்தை உருவாக்கக்கூடாது - 'தி கேரளா ஸ்டோரி' குறித்து பேட்ட வில்லன் கருத்து!

  தி கேரளா ஸ்டோரி படம் தொடர்பாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ட்வீட் செய்திருந்தார். அதில், ஒரு படத்தை ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ, அல்லது. ஒரு படம் பிரச்சார படமோ இல்லோயோ, அந்தப் படம் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, இல்லையோ அந்தப் படத்தை தடை செய்வது தவறு என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  MORE
  GALLERIES

 • 25

  மக்களை பிளவுபடுத்தும் படத்தை உருவாக்கக்கூடாது - 'தி கேரளா ஸ்டோரி' குறித்து பேட்ட வில்லன் கருத்து!

  தமிழில் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திகி, தற்போது ஜோகிரா ச ரா ரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

  MORE
  GALLERIES

 • 35

  மக்களை பிளவுபடுத்தும் படத்தை உருவாக்கக்கூடாது - 'தி கேரளா ஸ்டோரி' குறித்து பேட்ட வில்லன் கருத்து!

  இந்தப் படம் தொடர்பாக நவாசுதீன் அளித்த பேட்டியில் அவரிடம் ’தி கேரளா ஸ்டோரி’ படம் தொடர்பாக அனுராக்கின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதலளித்த நவாசுதீன், ’’அவரின் கருத்தை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒரு படமோ, நாவலோ ஒருவரை காயப்படுத்துகிறது என்றால் அது தவறு. மக்களின் நம்பிக்கைகளை காயப்படுத்தும் ஒரு படத்தை நாம் உருவாக்க கூடாது.

  MORE
  GALLERIES

 • 45

  மக்களை பிளவுபடுத்தும் படத்தை உருவாக்கக்கூடாது - 'தி கேரளா ஸ்டோரி' குறித்து பேட்ட வில்லன் கருத்து!

  ஒரு படம் சமூகத்தில் அமைதியையும் அன்பையும் ஏற்படுத்த வேண்டும். ஆனால் மக்களை பிளவுபடுத்தும் மற்றும் சமூக நல்லிணக்கத்தை உடைக்கும் அளவுக்கு கருத்துகள்களை கொண்டிருந்தால் அது மிகவும் தவறானது. நாம் உலகை இணைக்க வேண்டும். பிளவுபடுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த உலகில் எதனையும் தடை செய்யக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 55

  மக்களை பிளவுபடுத்தும் படத்தை உருவாக்கக்கூடாது - 'தி கேரளா ஸ்டோரி' குறித்து பேட்ட வில்லன் கருத்து!

  தி கேரளா ஸ்டோரி இந்திய அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட ஒரு இந்திய திரைப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பது இதுதான் முதல்முறை என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  MORE
  GALLERIES