2019 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் வழங்கப்பட்டது.
2/ 26
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி திரைக் கலைஞர்களை பாராட்டினார்.
3/ 26
அவருடன் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், இணையமைச்சர் எல். முருகன் மற்றும் திரைப்பட இயக்குநரக அதிகாரிகள் உடனிருந்தனர்.
4/ 26
2019 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கொரோனா காரணமாக ஒராண்டு தாமதமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
5/ 26
கடந்த 2019, ஜனவரி முதல் டிசம்பர் வரை தணிக்கை செய்யப்பட்ட படங்களில் சிறந்த படைப்புகளை நான்கு மண்டலங்களுக்கான ஜூரி குழுக்கள் இறுதி செய்தது.
6/ 26
இம்முறை Feature Film பிரிவில் 461 படங்களும், Non-Feature பிரிவில் 220 படங்களும் விண்ணப்பித்திருந்தது.
7/ 26
மேலும் படங்களுக்கேற்ற சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில் 13 மாநிலங்களில் இருந்து பரிந்துறைைக்கப்பட்ட நிலையில் பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு மொத்தம் 74 விருதுகள் இறுதி செய்யப்பட்டன.
8/ 26
அதற்கான அறிவிப்பை தேசிய திரைப்பட இயக்குநரக அதிகாரிகள் வெளியிட்டனர்.
9/ 26
இந்திய திரை உலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக நாட்டின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப் பட்டது.
10/ 26
"தங்கத் தாமரை" பதக்கம் மற்றும் ₹ 10 லட்சம் ரூபாயும் விருதுக்கான சான்றிதழையும் துணைக் குடியரசுத் தலைவரிடம் இருந்து ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
11/ 26
விருது வழங்கும் முன்னர் 45 ஆண்டுகால ரஜினியின் சினிமா வாழ்க்கை குறித்த காணொளி திரையிடப்பட்டது.
12/ 26
தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த்
13/ 26
தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த்
14/ 26
தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த்
15/ 26
2019 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை அசுரன் படத்துக்காக நடிகர் தனுஷ் மற்றும் போன்ஸ்லே படத்துக்காக மனோஜ் பாஜ்பாய் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.
16/ 26
நடிகர் மனோஜ் பாஜ்பாய்
17/ 26
தனுஷ் தேசிய விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார்.
18/ 26
சிறந்த நடிகைக்கான விருதை பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நான்காவது முறையாக பெற்றுக் கொண்டார்.
19/ 26
மணிகர்ணிகா மற்றும் பங்கா திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2019 ஆண்டிற்கான தேசிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
20/ 26
மொழி வாரியாக அறிவிக்கப்பட்ட விருது பட்டியலில்,. தமிழில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அசுரன் படத்துக்காக தேசிய விருதை தயாரிப்பாளர் தாணு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
21/ 26
வெற்றிமாறன் தேசிய விருது பெறுவது இரண்டாவது முறையாகும்.
22/ 26
அசுரன் படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
23/ 26
சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளியத்தியமைக்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.
24/ 26
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதை படத்துக்காக டி இமான் பெற்றார்.
25/ 26
"ஒத்த செருப்பு எண் 7" படத்தில் நடத்தமைக்கான நடிகர் பார்த்திபனுக்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது. மேலும் அதே படத்தில் சிறந்த சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை ஒத்த செருப்பு படத்திற்காக ரசூல் பூக்குட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.
26/ 26
குழந்தை நட்சத்திர விருதை கேடி கருப்பு படத்தில் நடித்த நாக விஷால் பெற்றுள்ளார்.