முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » விஜய் தயாரிப்பில் அவரது அம்மா எழுதி, இயக்கிய படம் எது தெரியுமா?

விஜய் தயாரிப்பில் அவரது அம்மா எழுதி, இயக்கிய படம் எது தெரியுமா?

ஷோபா சந்திரசேகர் சிறந்த கதாசிரியர். எஸ்.ஏ.சந்திரசேகரின் இரண்டாவது படம் சட்டம் ஒரு இருட்டறை, விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு உள்பட கிட்டத்தட்ட 50 படங்களுக்கு அவர் கதை எழுதியுள்ளார்.

  • 15

    விஜய் தயாரிப்பில் அவரது அம்மா எழுதி, இயக்கிய படம் எது தெரியுமா?

    நடிகர் விஜய்யின் அம்மா, ஷோபா சந்திரசேகர் பின்னணி பாடகி என்பது தெரியும். விஜய் நடித்தப் படங்களில், விஜய்யுடன் இணைந்து பாடியிருக்கிறார். அவர் ஓர் இயக்குநரும்கூட. இரு படங்கள் இயக்கியுள்ளார். அந்த இரு படங்களையும் வி.வி.கிரியேஷன்ஸ் சார்பில் விஜய்யே தயாரித்தார்.

    MORE
    GALLERIES

  • 25

    விஜய் தயாரிப்பில் அவரது அம்மா எழுதி, இயக்கிய படம் எது தெரியுமா?

    ஷோபா சினிமாவில் அறிமுகமாகும் முன் மெல்லிசைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்தார். இரு மலர்கள் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், ஒரு மகாராஜா ஒரு மகாராணி... பாடலை சதன், டி.எம்.சௌந்தர்ராஜன் ஆகியோருடன் இணைந்து பாடினார். அதுதான் அவரது முதல் திரையிசை. 1978 இல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய அவள் ஒரு பச்சைக் குழந்தை படத்தில் ஒரு பாடல் பாடினார். அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் பாடினார். குறிப்பாக தனது கணவரின் கிட்டத்தட்ட அனைத்துப் படங்களிலும் பாடினார். அவர் அடிப்படையில் கிறிஸ்தவராக இருந்தும் அதிகளவில் இந்து ஆன்மிகப் பாடல்கள் பாடியுள்ளார். ஆனைமுகத்தானும் ஆறுமுகத்தானும் அவர் பாடிய சிறப்பான ஆன்மிக ஆல்பமாகும்.

    MORE
    GALLERIES

  • 35

    விஜய் தயாரிப்பில் அவரது அம்மா எழுதி, இயக்கிய படம் எது தெரியுமா?

    ஷோபா சந்திரசேகர் சிறந்த கதாசிரியர். எஸ்.ஏ.சந்திரசேகரின் இரண்டாவது படம் சட்டம் ஒரு இருட்டறை, விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு உள்பட கிட்டத்தட்ட 50 படங்களுக்கு அவர் கதை எழுதியுள்ளார். அவர் கதை எழுதி, இயக்கிய முதல் படம் நண்பர்கள். 1991 இல் காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 14 நண்பர்கள் வெளியானது.  நீரஜ், மம்தா குல்கர்னி என்று தமிழர்களுக்கு பரிட்சயமில்லாத நடிகர்கள் பிரதான வேடங்களில் நடித்தனர். நாயகனின் நண்பர்களாக விவேக், ஜி.எம்.சுந்தர் கலகலப்பூட்டினர். சங்கீத ராஜன் பின்னணி இசையமைக்க, பாபு போஸ் பாடல்களுக்கு இசையமைத்தார்.

    MORE
    GALLERIES

  • 45

    விஜய் தயாரிப்பில் அவரது அம்மா எழுதி, இயக்கிய படம் எது தெரியுமா?

    திமிர் பிடித்த பணக்கார நாயகி, நாயகனை அவமதிப்பதும், நாயகன் அவளை பழிவாங்குவதும், பிறகு இருவரும் காதலிப்பதுமான அரதப்பழைய கதைதான் நண்பர்கள். அதனை இளமையும், நகைச்சுவையும் ததும்ப தந்திருந்தார் ஷோபா. அந்தக்காலத்தில் நண்பர்கள் மாடர்னாகவும், அன்றைய இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த படமாகவும் அமைந்தது. குறிப்பாக பாடல்கள் ஹிட்டாயின. படத்தின் நாயகனுக்கு விஜய் பெயரையே ஷோபா சூட்டியிருந்தார். இயக்குனர் ஷங்கர் இதில் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்திருந்தார். டைட்டிலில் தனியாக அவரது பெயர் இடம்பெற்றிருக்கும். நண்பர்கள் வெற்றியை தொடர்ந்து, அதனை இந்தியில் ரீமேக் செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். அங்கு படம் ப்ளாப்பானது.

    MORE
    GALLERIES

  • 55

    விஜய் தயாரிப்பில் அவரது அம்மா எழுதி, இயக்கிய படம் எது தெரியுமா?

    இதனைத் தொடர்ந்து அடுத்த வருடமே இன்னிசை மழை என்ற படத்தை ஷோபா எழுதி, இயக்கினார். விஜய்யே படத்தை தயாரித்தார். இதிலும் நாயகனின் பெயர் விஜய்தான். நாயகிக்கு தனது முந்தையப் படத்தின் நாயகியின் பெயரை (மம்தா) வைத்திருந்தார்.  இளையராஜா இசையில் பாடல் ஹிட்டாயின. நண்பர்கள் அளவுக்கு இன்னிசை மழை வரவேற்பு பெறவில்லை. அதன் பிறகு கதை எழுதுவதுடன் தனது சினிமா ஆர்வத்தை ஷோபா நிறுத்திக் கொண்டார். 1991, பிப்ரவரி 14 வெளியான நண்பர்கள் இன்று 32 வருடங்களை நிறைவு செய்கிறது.

    MORE
    GALLERIES