சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை நாக சைத்தன்யா வெளிப்படுத்தியுள்ளார். சமந்தாவை பிரிந்த பிறகு நடிகை ஷோபிதா துலிபலாவை நாக சைதன்யா காதலிப்பதாக செய்திகள் வலம் வந்தன. இதற்கிடையே லால் சிங் சத்தா படத்தின் புரொமோஷனுக்காக, பல நேர்காணல்களில் பங்கேற்றார் சைத்தன்யா. ஒரு நேர்காணலில், தொகுப்பாளர் கூறும் பிரபலங்களைப் பற்றி உடனடி கருத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு சைத்தன்யாவிடம் கேட்கப்பட்டது. அப்போது சோபிதா துலிபலா பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, உரக்க சிரித்த நாக சைத்தன்யா “நான் புன்னகைக்கப் போகிறேன்” என்றார். தகவல்களின்படி, சைதன்யா ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு அழகான இடத்தை வாங்கியுள்ளாராம், அது இப்போது கட்டுமானத்தில் உள்ளது. நாக சைதன்யாவும் ஷோபிதாவும் அந்த இடத்தைப் பார்வையிட்டதாகவும், சில மணி நேரம் கழித்து, இருவரும் ஒரே காரில் ஒன்றாக புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.