மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாலும் பழமும் படத்தை இந்தியில் ரீமேக் செய்த ஸ்ரீதர், இசைக்காக நௌஸத் அலியிடம் செல்ல, பாலும் பழமும் பாடல்களைக் கேட்ட நௌஸத், இவ்வளவு சிறந்த இசையை என்னால் மாற்ற முடியாது என திருப்பியனுப்பியதுடன், மெல்லிசை மன்னர்களின் இசையை பாராட்டி கடிதமும் எழுதினார். பிறகு மெல்லிசை மன்னர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஸ்ரீதர் படத்துக்கு இசையமைத்துத் தந்தார்.
நுரையீரல் தொற்றுக்கு அவர் பல மாதங்களாக சிகிச்சை எடுத்துவந்த நிலையில் அவரது மரணம் சம்பவித்தது. அவருக்கு வந்த நோயை இடியோபதி நுரையீல் நோய் என்கிறது மருத்துவ உலகம். காரண காரியம் சொல்ல முடியாத நோய்களை இடியோபதி என்பார்கள். இசையை மூச்சாகக் கொண்டவருக்கு நுரையீரல் நோய் தொற்றால் மரணம் என்பது ஓர் அவல நகைமுரண்.
பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயற்சி செய்த கமல், இந்தப் படத்தின் தூண்டுதலே அதற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிரதான காரணமாக இருந்தது நௌஸத் அலியின் இசையும் பாடல்களும். மொத்தம் 12 பாடல்கள். அதுவே ஏறக்குறைய 50 நிமிடங்கள் வரும். அதில் எட்டு பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடினார். ஒரு பாடலை அவரும் ஷம்ஜத் பேகமும் இணைந்து பாடினார்கள். ஒரு பாடல் முகமது ரஃபி, இரண்டு பாடல்கள் குலாம் நபி கான். அனைவருமே இசையின் பேரரசர்கள்.