இதனை நம்பிய வாடிக்கையாளர்களும் லிங்கை கிளிக் செய்ய, அடுத்தக் கணமே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது போல் குறுஞ்செய்திகள் அடுத்தடுத்து வர ஆரம்பித்தன. மூன்று நாட்களுக்குள் லட்சக்கணக்கான ரூபாய் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டன.