இந்த வருடம் தாய்மையடைந்த காஜல் அகர்வால் இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். உடல்க்குறைவால் பாதிக்கப்பட்ட சமந்தாவுக்கு 2-வது இடம். பரபரப்பான படங்கள் மற்றும் ரசிகர்களுடன் இடைவிடாத தொடர்பு ஆகியவை ராஷ்மிகா மந்தனாவுக்கு 3 வது இடத்தைப் பெற்றுத் தந்தன. இதில் தமன்னாவுக்கு 4-ம் இடம். திருமணம் முதல் வாடகைத்தாய் சர்ச்சை வரை, நல்லது கெட்டது என பலமுறை செய்திகளில் இடம்பிடித்த நயன்தாராவுக்கு 5வது இடம். எந்த படமும் வெளியாகவில்லை, சமூக வலைதளங்களில் புகைப்படங்களும் பகிர்வதில்லை, ஆனாலும் இந்தப் பட்டியலில் அனுஷ்கா 6-வது இடம் பிடித்துள்ளார். பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு 7-வது இடம். தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷுக்கு இதில் 8-வது இடம். சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் சாய் பல்லவி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். 10-வது இடத்தைப் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்.