முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 28 வருட பழைய படம்.. சுந்தர்.சி படத்தின் ஒரிஜினல்.. ரீ ரிலிஸில் வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் 'ஸ்படிகம்' திரைப்படம்!

28 வருட பழைய படம்.. சுந்தர்.சி படத்தின் ஒரிஜினல்.. ரீ ரிலிஸில் வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் 'ஸ்படிகம்' திரைப்படம்!

மாஸுக்கு மாஸ் கிளாஸுக்கு கிளாஸ் என்று கலந்துகட்டி அடித்த ஸ்படிகத்திடம் மலையாளிகள் உலகம் இன்றும் மயங்கிப் போய்தான் கிடக்கிறது.

 • 19

  28 வருட பழைய படம்.. சுந்தர்.சி படத்தின் ஒரிஜினல்.. ரீ ரிலிஸில் வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் 'ஸ்படிகம்' திரைப்படம்!

  1995 இல் வெளியான மோன்லாலின் ஸ்படிகம் திரைப்படத்தை, டிஜிட்டலில் ரீமாஸ்டர்ட் செய்து இன்று மறுவெளியீடு செய்திருக்கிறார்கள். இரண்டு வாரங்கள் முன்பு வெளியான மோகன்லாலின் புதிய படம் அலோன் முதல் நாளில் 10 லட்சங்கள் வசூலித்து, மோகன்லால் படங்களிலேயே அடிமட்ட  வசூலைப் பெற்ற படமான போது, 28 வருடங்களுக்கு முன் வெளியான ஸ்படிகம் மறுவெளியீடு செய்யப்பட்டிருக்கும் இன்று, அதிகாலை ரசிகர்கள் காட்சி, முன்பதிவில் 27 லட்ச ரூபாய் வசூல் என்று அதகளப்படுத்துகிறது. அப்படி ஸ்படிகத்தில் என்ன ஸ்பெஷல்?

  MORE
  GALLERIES

 • 29

  28 வருட பழைய படம்.. சுந்தர்.சி படத்தின் ஒரிஜினல்.. ரீ ரிலிஸில் வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் 'ஸ்படிகம்' திரைப்படம்!

  இயக்குனர் பத்ரன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மம்முட்டியை வைத்து ஐயர் தி கிரேட் படத்தையும், மோகன்லாலை வைத்து அங்கிள் பன் படத்தையும் எடுத்தார். இதில் மம்முட்டி படம் ஹிட் அடிக்க, காமெடிப் படமான அங்கிள் பன் பாக்ஸ் ஆபிஸில் நொண்டியடித்தது. அதையடுத்து 1995 இல் ஸ்படிகம் படத்தை இயக்கினார். கண்டிப்பான கணக்கு வாத்தியார் சாக்கோ மாஸ்டரின் மகன் தாமஸ் சாக்கோவுக்கு கணக்கைவிட அறிவியலில் ஆர்வம், மகனின் ஆர்வத்தை மதிக்காமல் பூமியே கணக்கில்தான் சுத்துது என்று மற்ற மாணவர்கள் முன்பு மகனை அவமானப்படுத்த, அந்த டார்ச்சரில் மகன்  தலைதிரிந்து ரவுடியாகிறான். விஞ்ஞானியாகும் புத்தி உள்ளவன் கல்குவாரி லாரி டிரைவராகிறான். அப்பனும், மகனும் பரஸ்பர எதிரியாகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 39

  28 வருட பழைய படம்.. சுந்தர்.சி படத்தின் ஒரிஜினல்.. ரீ ரிலிஸில் வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் 'ஸ்படிகம்' திரைப்படம்!

  தாமஸ் சாக்கோ அநியாயத்தைக் கண்டால் அங்கேயே வேட்டியை உருவி எதிராளியின் தலையை மூடி அடிப்பவன். அவனது வேட்டி அடி ஊரில் பிரபலம். பட்டப் பெயர் ஆடு தோமா. அடிபட்டால் வர்மத்துக்கு ஆட்டு ரத்தம் குடித்து, காந்தாரி மிளகுடன் பச்சிலை அரைத்து குடிப்பதால் கிடைத்த பெயர். போலீஸ் அதிகாரி குட்டிக்காடனுடன் நடக்கும் மோதலில் ஆடு தோமா விபச்சாரியான அவனது கள்ளக்காதலியுடன் கைவிலங்கிட்டு தெருவில் இழுத்து வரப்படுகிறான். அதுபற்றியெல்லாம் அவன் கவலைப்படுவதில்லை. சாக்கோ மாஸ்டரின் மகன் மீதான வன்மம், அவனை போலீசிடம் மாட்டிவிடுகிறது. மகளும், மனைவியும்கூட சாக்கோ மாஸ்டரின் அதிகார கண்டிப்புக்கு உடன்படாமல் விலக ஆரம்பிக்கிறார்கள். உங்க பொன்னும் நகையும் வேண்டாம் என்று, அண்ணன் சார்பில் தரப்படும் ஒரேயொரு தங்கச் சங்கிலியுடன் மணமோடையேறும் மகளை கைப்பிடித்துத்தர சாக்கோ மாஸ்டர் மறுத்துவிடுகிறார். மகள் படியிறங்கியதும் மனைவியும் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

  MORE
  GALLERIES

 • 49

  28 வருட பழைய படம்.. சுந்தர்.சி படத்தின் ஒரிஜினல்.. ரீ ரிலிஸில் வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் 'ஸ்படிகம்' திரைப்படம்!

  'எல்லோரும் வீட்டைவிட்டுப் போய் தனிமையில் இருக்கும் போதுதான் உலகம் வெறும் கணக்கில்லைங்கிறது உமக்கு புரியும்' என்ற ராவுன்னி மாஸ்டரின் வார்த்தைகளின் சத்தியத்தை சாக்கோ மாஸ்டர் அறிகிறார். மகனை அவர் புரிந்து கொள்ளும் போது மகன் குத்துப்பட்டுக் கிடக்கிறான். குடும்பம் ஒன்று சேரும் தருணத்தில் குட்டிக்காடனின் சதியால் தாமஸ் சாக்கோவுக்குப் பதில் சாக்கோ மாஸ்டர் உயிரைவிட தாமஸ் சாக்கோவின் பழிவாங்கலுடன் படம் நிறைவு பெறும்.

  MORE
  GALLERIES

 • 59

  28 வருட பழைய படம்.. சுந்தர்.சி படத்தின் ஒரிஜினல்.. ரீ ரிலிஸில் வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் 'ஸ்படிகம்' திரைப்படம்!

  20 ஆம் நூற்றாண்டு, ராஜாவின்டெ மகன் என்று ஆக்ஷன் படங்களில் மோகன்லால் நடித்திருந்தாலும் தேவாசுரம் படமே அவரது முதல் மாஸ் அண்ட் கிளாஸ் ஆக்ஷன் படம். அதன்பிறகு மோகன்லாலுக்கு அப்படி அமைந்த படம்தான் ஸ்படிகம். சுருட்டிவிட்ட சட்டைக் கை, ரேபான் குளிர் கண்ணாடி, வெள்ளை வேட்டி, அதை எதிராளி முன் தூக்கிக்கட்டி தொடையை தடவும் மேனரிசம் என்று ஆடு தோமா கதாபாத்திரத்தை மலையாள சினிமாவின் அழியாத கதாபாத்திரமாக்கினார்.

  MORE
  GALLERIES

 • 69

  28 வருட பழைய படம்.. சுந்தர்.சி படத்தின் ஒரிஜினல்.. ரீ ரிலிஸில் வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் 'ஸ்படிகம்' திரைப்படம்!

  அவரது பள்ளித் தோழியாக வந்து காதலியாகும் துளசி இன்னொரு முக்கியமான கதாபாத்திரம். ஆடு தோமா விபச்சாரத்தில் பிடிபட்டது அறிந்து, அவரது தங்கைக்கு நிச்சயித்த திருமணம் முடங்கிப் போக, அந்த மாப்பிள்ளை தங்கைக்கு தந்த சென்ட் பாட்டிலை திருப்பித்தர மோகன்லால் செல்லும் இடம் மாஸான காட்சி. மாப்பிள்ளையின் தந்தை முறுக்கிக் கொள்ள, நான் கல்யாணம் பண்ணப் போறது தாமஸ் சாக்கோவை இல்லை, அவரு தங்கச்சியை. கட்டுனா அவளைத்தான் கட்டுவேன் என மாப்பிள்ளை அசோகன் மோகன்லாலை அனுப்பி வைப்பது, இப்போது பார்த்தாலும் மயிர்சுச்செரியும்.

  MORE
  GALLERIES

 • 79

  28 வருட பழைய படம்.. சுந்தர்.சி படத்தின் ஒரிஜினல்.. ரீ ரிலிஸில் வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் 'ஸ்படிகம்' திரைப்படம்!

  துளசியாக வரும் ஊர்வசி, அவரது தந்தை ராவுன்னி மாஸ்டராக வரும் நெடுமுடிவேணு, சாக்கோ மாஸ்டரின் தம்பியாக வந்து, மோகன்லாலுக்கு பரிந்து பேசும் ராஜன் பி.தேவ். பாதிரியாராக வரும் ஜனார்த்தனன், சாக்கோ மாஸ்டரின் மனைவியாக வரும் கேபிஏசி லலிதா, சாக்கோ மாஸ்டரை கண்டதும் கடுவா கடுவா என குரல் எழுப்பும் மோகன்லால் வளர்க்கும் மைனா உள்பட அனைவரும் படத்துக்கு சிறப்புச் சேர்த்திருப்பார்கள். எனினும் அல்டிமேட் ஸ்கோர் செய்வர் சாக்கோ மாஸ்டராக வரும் திலகன். அந்த கோபம், கண்டிப்பு, திமிர் என்று மனிதர் பின்னியிருப்பார். மகனை புரிந்து கொண்டு, அவன் குத்துப்பட்டுக் கிடப்பதை ரகசியமாகச் சென்று பார்த்துவிட்டு, பிறர் பார்த்துவிடாமல் இருக்க, சட்டைக் கையை சுருட்டிவிட்டு, தலையில் துண்டைப் போட்டு ஒரு நடைநடப்பார்... திலகன் ஒரு நடிப்பு ராட்சசன் என்பதற்கு அந்த ஒரு காட்சி போதும்.

  MORE
  GALLERIES

 • 89

  28 வருட பழைய படம்.. சுந்தர்.சி படத்தின் ஒரிஜினல்.. ரீ ரிலிஸில் வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் 'ஸ்படிகம்' திரைப்படம்!

  மாஸுக்கு மாஸ் கிளாஸுக்கு கிளாஸ் என்று கலந்துகட்டி அடித்த ஸ்படிகத்திடம் மலையாளிகள் உலகம் இன்றும் மயங்கிப் போய்தான் கிடக்கிறது. மம்முட்டிக்கு ஒரு கோட்டயம் குஞ்ஞச்சன் போல மோகன்லாலுக்கு ஒரு ஆடு தோமா. இந்த கதாபாத்திர மேற்கோள் பல படங்களில் வந்திருக்கிறது. மம்முட்டியின் ராஜமாணிக்கம் படத்திலும் கூட இடம்பெற்றுள்ளது. ஸ்படிகம் வெளியாகி பத்து வருடங்கள் கழித்து, பத்ரன் மோகன்லாலை வைத்து இயக்கிய உடையோன் படத்தில் ஆடு தோமா கெட்டப்பில் வந்து ஜெகதி ஸ்ரீகுமார் காமெடி செய்வார்.

  MORE
  GALLERIES

 • 99

  28 வருட பழைய படம்.. சுந்தர்.சி படத்தின் ஒரிஜினல்.. ரீ ரிலிஸில் வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் 'ஸ்படிகம்' திரைப்படம்!

  அப்படி சாகாவரம் பெற்ற கதாபாத்திரமான ஆடு தோமாதான் ஸ்படிகத்தின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன். அதனைத்தான் மலையாள ரசிகர்கள் இன்று திரையரங்கில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் தமிழில் யுத்தம் என்று 'டப்' செய்யப்பட்டு வெளியான போது யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு சுந்தர் சி. ஸ்படிகத்தை வீராப்பு என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து நடித்தார். ஸ்படிகத்தின் எந்தவொரு நேர்மறை அம்சமும் இல்லாத மோசமான ரீமேக்காக வீராப்பு எஞ்சியது. ஸ்படிகத்தை பார்க்க விரும்புகிறவர்கள் அதனை மலையாளத்தில் பார்ப்பதுதான் அதற்கான நியாயம்.

  MORE
  GALLERIES