மலையாளத்தில் வெளியான லூசிபர் திரைப்படத்தை மோகன்ராஜா இயக்கத்தில் தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். காட்ஃபாதர் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடித்த வேடத்தில் சிரஞ்சீவியும், மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில் நயன்தாராவும் நடிக்கின்றனர். முக்கியமான கௌரவ வேடம் ஒன்றில் சல்மான் கான் நடிப்பதாக கூறப்பட்டது. அதன்படி சல்மான் கானும் காட்ஃபாதரில் நடித்தார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெற்றிகரமாக படமாக்கியதாக மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.