கசிந்த படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர வேண்டாம் என்று படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை எச்சரித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம், "நடிகர் விஜய்யின் லியோ எனும் தளபதி 67 ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் / வீடியோக்கள் கசிந்ததை பகிர வேண்டாம். விதிமீறல் லிங்குகள் எச்சரிக்கை எதுவும் இல்லாமல் உடனடியாக நீக்கப்படும்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்பு காட்சிகள் லீக் ஆவதை தடுக்க படக்குழு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாம். படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள் என யாருமே கேமரா, செல்போன் வைத்திருக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதாம். பரிசோதனைக்கு பிறகே அவர்கள் ஷூட்டிங்குக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்