படத்தின் இறுதிக்காட்சியை மெரினா கடற்கரையில் எடுத்திருந்தார்கள். கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்குக்கீழே இறுதிக்காட்சி நடக்கும். ஒய்.ஜி.மகேந்திரன், மனோரமா, லட்சுமி என யார் அழைத்தும் கேட்காமல், கடமை முடிந்தது என்று விலகிச் செல்லும் சிவாஜி, நீங்க போனால் நானும் உங்க மகளைப்போல சாமிகிட்ட போயிடுவேன் என்று மீனா சொல்ல, சிவாஜி பதறி ஓடிவருவார். அத்தோடு சுபம்.