‘மாஸ்டர்’ பட விழாவில் தாயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!
Web Desk | March 15, 2020, 5:21 PM IST
1/ 5
மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் தாயின் ஆசையை நடிகர் விஜய் நிறைவேற்றியிருப்பது அங்கிருப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2/ 5
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.
3/ 5
மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள கோட் சூட் அணிந்து வந்திருந்தார் நடிகர் விஜய்.
4/ 5
இசை வெளியீட்டு மேடைக்குச் சென்ற விஜய்யின் தாய், தந்தையிடம் உங்கள் ஆசை என்ன என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கேட்க, விஜயைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார். உடனே மேடைக்குச் சென்று தனது பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் நடிகர் விஜய்.
5/ 5
மாஸ்டர் இசை வெளியீட்டு மேடையில் நடிகர் விஜயின் பெற்றோர்.