பிளான் பண்ணி பண்ணணும் (தமிழ்): பத்ரி வெங்கடேஷ் எழுதி இயக்கியிருக்கும் படம் பிளான் பண்ணி பண்ணணும். ரியோ ராஜ், ரம்யா நம்பீஸன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாஸிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோ தயாரிப்பு. காமெடிப் படமாக தயாராகியிருக்கும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், சந்தானபாரதி, பாலசரவணன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 24 படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
சிண்ட்ரெல்லா (தமிழ்): வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி நடிப்பில் தயாராகியிருக்கும் நாயகி மையப்படம். அப்படிச் சொல்லும் போதே, இதுவொரு பேய்ப் படம் என்பதும் புரிந்திருக்கும். ராய் லட்சுமியுடன் சாக்ஷி அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. செப்டம்பர் 24 திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
லவ் ஸ்டோரி (தெலுங்கு): நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவயானி, ஈஸ்வரி ராவ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் லவ் ஸ்டோரியை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். படத்தை ப்ரீமியர் ஷோவில் பார்த்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இயக்கம் சேகர் கம்முலா என்பதால் படம் சிறப்பாக இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. செப்டம்பர் 24 திரையரங்கில் படம் வெளியாகிறது.
ஜங்கிள் க்ரூஸ் (தமிழ், ஆங்கிலம்): ட்வைனி ஜான்சன் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆக்ஷன் அட்வென்ஜர் திரைப்படம் ஜங்கிள் க்ரூஸ். இந்தியாவில் செப்டம்பர் 24 வெளியாகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் படத்தை வெளியிடுகின்றனர். தமிழகத்தில் தமிழ், ஆங்கில பதிப்பகள் வெளியாகின்றன. குழந்தைகளுக்கு ஏற்ற திரைப்படம்.