இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். வினோத் இந்தப் படத்தில் ஒரு புதிய காம்போவை விரும்பினார். அதற்கு மஞ்சு வாரியர் பொருத்தமாக இருப்பார் என்று அவர் உணர்ந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு திடமான நடிப்புத் தேவை, எனவே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் படக்குழு மஞ்சுவை அணுகியது. அவர் சமீபத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என தகவல் ஒன்று தெரிவித்தது.