முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இன்னொரு ஹீரோயினா? - நயன்தாரா மறுத்ததால் நடிகையின் காட்சியை நீக்கிய படக்குழு? வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

இன்னொரு ஹீரோயினா? - நயன்தாரா மறுத்ததால் நடிகையின் காட்சியை நீக்கிய படக்குழு? வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

நயன்தாரா நடிக்க மறுத்ததால் பிரபல நடிகையின் காட்சிகளை நீக்கியதாக சர்ச்சை உருவாகியுள்ளது.

 • 18

  இன்னொரு ஹீரோயினா? - நயன்தாரா மறுத்ததால் நடிகையின் காட்சியை நீக்கிய படக்குழு? வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

  மலையாளத்தில் மயூகம் என்ற திரைப்படத்தின் மூலம் 2005ம் ஆண்டு அறிமுகமானார் நடிகை மம்தா மோகன்தாஸ் .

  MORE
  GALLERIES

 • 28

  இன்னொரு ஹீரோயினா? - நயன்தாரா மறுத்ததால் நடிகையின் காட்சியை நீக்கிய படக்குழு? வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

  மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார் மம்தா. தமிழில் குசேலன், சிவப்பதிகாரம், தடையற தாக்க, குரு என் ஆளு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 38

  இன்னொரு ஹீரோயினா? - நயன்தாரா மறுத்ததால் நடிகையின் காட்சியை நீக்கிய படக்குழு? வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

  தனக்கு ஆட்டோ இம்யூன் எனப்படும் விட்டிலிகோ நோய் இருப்பதாகவும் இதனால், தன்னுடைய நிறம் மாறுவதாகவும் அவர் இன்ஸ்டாவில் குறிப்பிட்டிருந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  MORE
  GALLERIES

 • 48

  இன்னொரு ஹீரோயினா? - நயன்தாரா மறுத்ததால் நடிகையின் காட்சியை நீக்கிய படக்குழு? வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

  விட்டிலிகோ என்பது தோலின் நிறத்தை இழக்கச்செய்யும் சரும நோய் ஆகும். இது எந்த வகை தோல் நிறமுடைய நபருக்கும் வரும். இந்த நோயால் பாதிக்கப்பட்டால் தோல் நிறம் இழக்கும்.

  MORE
  GALLERIES

 • 58

  இன்னொரு ஹீரோயினா? - நயன்தாரா மறுத்ததால் நடிகையின் காட்சியை நீக்கிய படக்குழு? வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

  கை, கால், உதடு, முடி என உடலின் எந்த பாகத்திலும் இந்த நோயால் நிறம் இழக்கலாம். உடலில் ஆங்காங்கே நிறமிழந்து திட்டுகள் உருவாகும். விட்டிலிகோ நோய்க்கு சிகிச்சை இல்லை என்றாலும் நிற மாற்றத்தை குறைக்க சிகிச்சைகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 68

  இன்னொரு ஹீரோயினா? - நயன்தாரா மறுத்ததால் நடிகையின் காட்சியை நீக்கிய படக்குழு? வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

  இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் யூடியூப் பக்கம் ஒன்றிற்கு மம்தா பேட்டியளித்திருந்தார். அதில்  மம்தா பேசியதாவது, ''ரஜினி சாருடன் ஒரு பாடலில் நடிப்பதற்காக வாய்ப்பு வந்தது. 4, 5 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் படம் வெளியான போது எனது காட்சிகள் இல்லை.''

  MORE
  GALLERIES

 • 78

  இன்னொரு ஹீரோயினா? - நயன்தாரா மறுத்ததால் நடிகையின் காட்சியை நீக்கிய படக்குழு? வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

  பின்னாளில் அந்த படத்தின் முன்னணி ஹீரோயின் படக்குழுவினரிடம் வேறு ஹீரோயின் இந்தப் பாடலில் நடித்தால், நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக கேள்விப்பட்டேன்.

  MORE
  GALLERIES

 • 88

  இன்னொரு ஹீரோயினா? - நயன்தாரா மறுத்ததால் நடிகையின் காட்சியை நீக்கிய படக்குழு? வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

  அந்தப் படத்தில் நான் திரும்பி இருப்பது போன்ற ஒரு ஷாட் மட்டும் இருக்கும். அது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் படம் குசேலன் என்றும் நடிக்க மாட்டேன் என்று சொன்ன நடிகை நயன்தாரா என்றும் ரசிகர்கள் குசேலன் பட ஓம் சாரரே பாடலில் மம்தா இடம்பெற்ற காட்சியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES