வேளாங்கண்ணிக்கு சுற்றுப்பயணம் வரும் மம்முட்டி ஒரு கிராமத்தை பார்த்தவுடன் வேறு ஒரு நபராக மாறி அந்த கிராமத்தில் ஏற்கெனவே வாழ்ந்த ஒரு தமிழர் கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலிக்கிறார். காணாமல் போன தமிழரின் ஆவி மம்முட்டி உடலுக்குள் வந்ததா இல்லை மம்முட்டி எதுவும் கதை கேட்டுவிட்டு நடிக்கிறாரா, உண்மையில் என்ன நடந்தது என ரசிகர்களையே யூகிக்கவிட்டு ரசிக்கும்படியான ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் லிஜோ ஜோஸ்.
பிளைவுட் நிறுவன விளம்பரத்தை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டு இருப்பதை படத்தின் ஆரம்பத்திலேயே இயக்குநர் ஒப்புக்கொண்டிருப்பது கலைக்கான மரியாதை. நல்ல தமிழ் படங்களை உருவாக்க நினைக்கும் இயக்குநர்கள் கதையை வேறெங்கோ தேடி அலையாமல் தமது கிராமங்களிலேயேகூட சிறந்த கதைகளை தேர்வுசெய்ய முடியும் என்பதற்கு இந்த படம் நல்லதோர் உதாரணம். OTT-யில் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு நண்பகல் நேரத்து மயக்கம் நல்ல விருந்து.