இந்தமுறை மலையாளிகளுக்கு ஓணம் வாழ்த்து சொன்ன மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாமன ஜெயந்திக்கு வாழ்த்து என தெரிவித்திருந்தார். மகாபலி மகாராஜாவின் வருகையை மறைத்து, வாமனனின் பிறந்த நாளாக ஓணத்தைத் திரித்து அவர் சொன்ன வாழ்த்துக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்த மத அரசியல் நமக்கு வேண்டாம். அமித்ஷாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், 'நீ போ மோனே ஷாஜி' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். மலையாளிகள் தவிர்த்த பலருக்கும் இதன் பொருள் தெரியாது.
அவர் இறந்து, அவரது சாம்பலை ஆற்றில் கரைக்க கொண்டு செல்கையில் இந்துசூடன் தனது ஆள்களுடன் வந்து, மணப்பள்ளி மாதவன் நம்பியாரின் சாம்பலை கரைக்கவிடாமல் தடுப்பார். மாதவன் நம்பியார் வெள்ளைக்காரனின் ஒற்றனாக இருந்து, சுதந்திரத்துக்குப் பின் அரசியலில் நுழைந்து பதவி வாங்கியவர் என இந்துசூடன் குற்றம்சாட்டுவார். கடைசியில் சாம்பலை கரைக்காமல் திருப்பிச் செல்வார்கள்.
இதில் இந்துசூடனாக மோகன்லால் நடித்திருந்தார். அவரை நரசிம்ம அவதாரம் போல் சித்தரித்து ஓபனிங் சீனை வைத்திருப்பார் இயக்குநர். வேதமந்திரங்கள் முழங்க ஆற்றங்கரையில் அவர் நடந்துவரும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் மோகன்லால், 'நீ போ மோனே தினேஷா' என்ற டயலாக்கை அடிக்கடி பிரயோகிப்பார். அப்படியென்றால் 'நீ போ என் மகனே தினேஷா' என்று பொருள். இந்த டயலாக் கேரளாவில் பிரபலம். நரசிம்ஹத்தில் கௌரவ வேடத்தில் வரும் மம்முட்டியும் மோகன்லாலின் இந்த டயலாக்கை பேசி நடித்திருப்பார்.
அதாவது, 'உனக்கு எதுவும் தெரியாது, ஏன்னா நீ வெறும் குழந்தை' என்று பொருள்.. 2001 இல் வெளிவந்த ராவணப்பிரபு படத்தில் 'சவாரி கிரிகிரி' என்ற டயலாக். இதனை அவர் பேச, அவரது தந்தையாக வரும் வயதான மோகன்லால், இது என்ன தெரியுமா? தமிழ்ல வர்ற ஒரு பாட்டு என, சவாரி கிரி கிரி சைதாப்பேட்டை வடகறி, உட்டான் பாரு ஜாங்கிரி என பாடிக் காட்டுவார்.
ரஜினியின், ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி பன்ச் டயலாக்கை நாம் மனப்பாடமாக வைத்திருப்பது போல், மலையாளிகள் இதுபோன்ற பன்ச் டயலாக்குகளை படங்களிலேயே திரும்ப வைப்பதும், நினைவுப்படுத்துவதும், சந்தர்ப்பங்களுக்கேற்ப மாற்றி பயன்படுத்துவதும் உண்டு. அமித்ஷாவின் வாழ்த்தால் ஓணத்தில் நீ போ மோனே ஷாஜி என ஹேஷ்டேக் போட்டு ட்ரோல் செய்யவும் பயன்பட்டிருக்கிறது.