ஜன கன மன – நெட்ஃப்ளிக்ஸ் : லீகல் த்ரில்லர் ஜானரில் ப்ரித்விராஜின் அற்புதமான நடிப்பில் வெளிவந்த படம். கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் கொல்லப்படுகிறார். நாட்டையே அதிரச்செய்யும் இந்தக் கொலை மற்றும் அதன் விசாரணை குறித்த காட்சிகள் த்ரில்லிங்காக அமைக்கப்பட்டிருக்கும். ஐ.எம்.டி.பி. யில் இந்தப் படம் 8.3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.