எதற்கும் துணிந்தவன் படத்தை விளம்பரப்படுத்த வந்த சூர்யாவுக்கு மலையாள ரசிகர்கள் மிகப் பிரமாதமான வரவேற்பு அளித்துள்ளனர். அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
2/ 11
தமிழ் நடிகர்களில் விஜய்க்கு அடுத்தபடி சூர்யாவுக்கு கேரளாவில் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்களை முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு பெரும் கூட்டம் இருக்கிறது.
3/ 11
நாளை சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகிறது. தமிழகத்தில் வெளியாகும் அதேநாள் கேரளாவிலும் படத்தை வெளியிடுகின்றனர்.
4/ 11
இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சூர்யா கேரளாவிலுள்ள கொச்சி சென்றிருந்தார்.
5/ 11
சூர்யா வருவதை அறிந்த ரசிகர்கள் பெரும் திரளாக கூடினர். கொல்லம், கோட்டயம் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து சூர்யா ரசிகர்கள் வாகனங்களிலும் வந்திருந்தனர்.
6/ 11
இதன் காரணமாக சூர்யா வந்த போது மிகப் பெரிய கூட்டம் கூடியது. மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில், பிருதிவிராஜ் போன்றவர்களுக்கே இந்த அளவு கூட்டம் கூடுவது இல்லை.
7/ 11
இதற்கு முன்னால் விஜய் தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தபோது இதே போன்று பெரும் கூட்டம் கூடியது. இப்போது சூர்யாவுக்கு கூடியிருக்கிறார்கள்.
8/ 11
நேரடியாக ஓடிடியில் வெளியான சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் சென்ற வருட இறுதியில் கேரளாவில் உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அந்த படத்தையும் அங்குள்ள சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
9/ 11
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
10/ 11
ஆனால் சென்ற வாரம் வெளியான மம்முட்டியின் பீஷ்மபர்வம் திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதாலும், நாளை மறுநாள் ராதேஷ்யாம் திரைப்படம் வெளியாகும் என்பதாலும் எதிர்பார்த்த அளவு திரையரங்குகள் எதற்கும் துணிந்தவனுக்கு கிடைக்கவில்லை.
11/ 11
எதற்கும் துணிந்தவன் லாபம் தரும் அளவுக்கு வசூலிக்கும் என்பதில் கேரள திரையரங்குகளும், விநியோகஸ்தர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
111
சூர்யாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த மலையாள ரசிகர்கள் - படங்கள்