பிரபாஸ் படத்தில் நடிப்பதற்கு நடிகை மாளவிகா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம் முதன் முறையாக தெலுங்கு சினிமாவில் மாளவிகா மோகனன் அறிமுகமாகிறார். தமிழில் வெளியான பேட்ட படத்தில் நடித்து மாளவிகா மோகனன் கவனம் பெற்றார். விஜயுடன் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மாளவிகா மோகனன் பிரபலமடைந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்து வந்தன. இடையே தனுஷுடன் நடித்த மாறன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் பிரபாஸ் படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சமூக வலைதளங்களில் மாளவிகா மோகனன் ஆக்டிவாக இருக்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 36 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்