ராஜமௌலியின் இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுக்கூத்து பாடலுக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணிக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு கோல்டன் குளோப் விருதினை பெரும் இந்தியர் என்ற பெருமை எம்.எம்.கீரவாணிக்கு கிடைத்திருக்கிறது. இது நம் நாட்டுக்கே பெருமை என நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.