நடிகர் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா கட்டமனேனியின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. தென்னிந்திய ஸ்டார், மகேஷ் பாபு - நடிகை நம்ரதா ஷிரோத்கரின் மகள், சித்தாரா கட்டமனேனி ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் நட்சத்திரக் குழந்தைகளில் ஒருவர். மேலும், அவர் ஒரு சோஷியல் மீடியா ஸ்டாரும் கூட. தனது மகிழ்ச்சியான வாழ்க்கையின், அழகான காட்சிகளை அடிக்கடி அங்கு பகிர்ந்து கொள்கிறார். 10 வயதே ஆகும் சித்தாரா, இன்ஸ்டகிராமில் தனக்கென ஓர் அக்கவுண்ட் வைத்திருக்கிறார். அங்கு அவரை 1 மில்லியன் நபர்கள் பின் தொடர்கிறார்கள். வெரிஃபைடு அக்கவுண்டான அதில், அடிக்கடி தனது படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்துக் கொள்கிறார். தற்போது தனது லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் சித்தாரா. அதைப் பார்த்த ரசிகர்கள், மகேஷ் பாபு வீட்டில் இன்னொரு ஹீரோயின் ரெடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.