தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய மகாலட்சுமி தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார். மகாலட்சுமிக்கு அனில் என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி. திருமணத்துக்கு பிறகு தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.   திருமணத்துக்குப் பிறகும் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார் மகாலட்சுமி.   மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் ரவீந்தர் உடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் இருவரும் ஒரே மாதிரி கருப்பு நிறத்தில் ட்ரெஸ் அணிந்துள்ளனர். திருமணமாகி 4 மாதங்கள் கழித்து வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இன்ஸ்டா கேப்ஷன் மூலம் தெரிவித்துள்ளார். வாழ்க்கை அழகா இருக்கு.. நீங்களும்தான் ரவீந்தர் என்று கேப்ஷனில் கூறியுள்ளார்.