லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
2/ 7
லவ் டுடே படத்தில் ஹீரோவாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதனே நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
3/ 7
படத்தில் ஹீரோயினாக நிகிதா என்ற கதாபாத்திரத்தில் இவானா நடித்துள்ளார். இவானா கதாநாயகியாக நடிப்பது இதுவே முதல் படமாகும்.
4/ 7
காதலர்கள் தங்களின் மொபலை மாற்றிக்கொள்வதால் வரும் பிரச்சனைகளை மிகவும் காமெடியாக காட்டியிருப்பார்கள். படத்தில் அம்மா செண்டிமெண்ட், எமோஷன் என எதுக்குமே பஞ்சம் இல்லை.
5/ 7
லவ் டுடே படத்தின் கிளைமேக்ஸ் படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். படம் முழுவதும் காமெடியாக இருந்தாலும் இறுதியில் நல்ல மெசேஜ் ஒன்றை ஆடியன்ஸுக்கு கூறியுள்ளனர்.
6/ 7
திரையரங்குகளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள லவ் டுடே திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது.
7/ 7
படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை நெட்ஃபிளிக்ஸ் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் கேப்ஷனாக ‘ உங்கள் பார்ட்னருடன் போனை மாற்றிக்கொள்வது ரிலேஷன்ஷிப்பிற்கு தீங்கு விளைவிக்கும் ‘ என்று பதிவிடப்பட்டுள்ளது.