நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். விஜய் படம் தீபாவளிக்கு ரிலீஸாகவில்லை என்றாலும் ரிலீஸாகும் நாளை தீபாவளியாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் படப்பிடிப்பு கடும் குளிரில் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் காஷ்மீரில் கஷ்டப்பட்டு குளிரில் வேலைப்பார்க்கும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டது.   லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.. லியோ படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அட்லீ - விஜய் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த காம்போ லியோ படத்தை முடித்தவுடன் இவர்கள் கூட்டணி சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தின் ‘லவ் டுடே’ என்ற மிகப்பெரிய ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். விரைவில் விஜய் தனது அடுத்த படத்தை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.