LOC கார்கில் (2003)
2003 இல் வெளியான ஜே.பி.தத்தா இயக்கிய மிகச்சிறந்த இந்தியப் போர்த் திரைப்படம் இது. இந்திய ராணுவத்தின் வெற்றிகரமான ஆப விஜய்யை அடிப்படையாகக் கொண்ட சஞ்சய் தத், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன், ரவீனா டாண்டன், அசுதோஷ் ராணா, சைஃப் அலிகான், நாகார்ஜூனா,மனோஜ் பாஜ்பாய், ஆஷிஷ் வித்யார்த்தி , ரவீனா டாண்டன், ராணி முகர்ஜி, இஷா தியோல் மற்றும் மஹிமா சவுத்ரி என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த படம். 255 நிமிட இந்த படம் தற்போது அமேசான் பிரைமில் உள்ளது.
தூப் (2003)
பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து கார்கில் டைகர் ஹில்லைப் பாதுகாத்து உயிர்நீத்த இந்திய ராணுவத் தளபதிகளில் ஒருவர் கேப்டன் அனுஜ் நய்யர் கதை. அஷ்வினி சௌத்ரி இயக்கிய தூப், நய்யரின் மறைவுக்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை ஆராய்கிறது.அவரது பெற்றோர்கள் சட்டத்தின் கைகளால் துன்புறுத்தப்பட்ட வாழ்க்கையைச் சரிசெய்ய முயற்சித்ததைச் சித்தரிக்கிறது. ஓம் புரி, ரேவதி, சஞ்சய் சூரி, குல் பனாக் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் யூடியூபில் உள்ளது.
குஞ்சன் சக்சேனா: கார்கில் பெண் (2020)
1999 கார்கில் போரில் பணியாற்றிய முதல் இந்திய விமானப்படை பெண் விமானி குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாறு ஆகும்.போரின் போது, ஒரு பறக்கும் அதிகாரியாக, சீட்டா விமானத்தை போர் மண்டலத்திற்குள் செலுத்தி பல வீரர்களை மீட்டு வரலாறு படைத்தார்.
ஜான்வி கபூர், பங்கஜ் திரிபாதி மற்றும் அங்கத் பேடி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் நெட்டபிலிக்ஸில் உள்ளது.
ஷெர்ஷா (2021)
1999 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி கார்கில் பாயிண்ட் 4875 ஐ பாகிஸ்தான் படைகளிடம் இருந்து மீட்டெடுத்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாறு. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடித்த இப்படத்தை தமிழ் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார்.இந்த படம் தற்போது அமேசான் பிரைமில் உள்ளது.
லக்ஷயா 2004
இது ஒரு கற்பனைக் கதை என்றாலும், கார்கில் மோதலின் நிகழ்வுகளால் தெளிவாக ஈர்க்கப்பட்டது. ஹிருத்திக் ரோஷனின் ,கரண் ஷெர்கிலும் அவரது குழுவினரும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எப்படி எதிர்த்துப் போரிட்டனர் என்பதாக கதை. அமிதாப் பச்சன், ஓம் பூரி, ராஜ் ஜுட்ஷி, சுஷாந்த் சிங் மற்றும் அம்ரிஷ் பூரி ஆகியோர் முக்கிய பாகங்களில் நடித்துள்ளனர்.
இந்த ஃபர்ஹான் அக்தர் இயக்கிய படம் அமேசான் பிரைம் வீடியோவில் லக்ஷ்யா கிடைக்கிறது.