தி கிரேட் இந்தியன் கிச்சன்
இது மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக். கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். குடும்பம் என்ற பெயரில் பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்கும் அவல நிலையை இந்தப் படம் பதிவு செய்துள்ளது.
ரன் பேபி ரன்
ஆர்.ஜே.பாலஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'ரன் பேபி ரன்'. காமெடி படங்களில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி, முதன்முறையாக திரில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.