ஏ கேர்ள் அண்ட் ஆன் ஆஸ்ட்ரோநட் (A Girl and an Astronaut)
ஒரு விண்வெளி வீரர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்குத் திரும்புகிறார், அவருக்கு ஏன் வயதாகவில்லை என்பதை நிறுவனம் ஒன்று ஆர்வம் காட்டுகிறது. அதன் பின் நடப்பனவற்றை சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறது இந்த வெப் சீரிஸ். இது வருகிற 17 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஆஃப்ரிகன் குயீன்ஸ்: Njinga (African Queens:Njinga )
பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட ஆப்பிரிக்க ராணிகளின் வாழ்க்கையைப் பற்றிய புதிய ஆவணத் தொடர். நிர்வாக தயாரிப்பாளராக ஜடா பிங்கெட் ஸ்மித் உள்ளார். நாட்டின் முதல் பெண் ஆட்சியாளரான Njinga, இராணுவத் திறனை அரசியல் மற்றும் இராஜதந்திர அறிவாற்றலுடன் இணைத்து, எப்படி ஆட்சி செய்தார் என்பது விரிவாக விளக்குகிறது. இது வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
சர்கஸ் (Cirkus)
இயல்பு மற்றும் வளர்ப்பு கோட்பாட்டைச் சோதிப்பதற்காக, டாக்டர் ராய் ஜம்னாதாஸ், அவர் மேற்பார்வையில் இயங்கும் ஆதரவற்றோர் இல்லத்திலிருக்கும் ஒரே மாதிரியான இரட்டைக் குழந்தைகளைப் பிரித்து இரண்டு வெவ்வேறு நகரங்களில் உள்ள இரண்டு வெவ்வேறு குடும்பங்களுக்கு தத்து கொடுக்கிறார். வளர்ந்து இருவரும் சந்தித்துக்கொள்ளும்போது ஏற்படும் நிகழ்வுகளை நகைச்சுவையாக பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்தப் படம் வருகிற 17 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
இன் லவ் ஆல் ஓவ ர் அகைன் (In Love All Over Again)
வழக்கமான ஊடலும் கூடலும் கதை தான். ஐரீனும், ஜூலியோவும் காதலித்து பிரிந்து, மீண்டும் காதலில் இணைய முயற்சிக்கின்றனர். அவர்களது முயற்சி மகிழ்ச்சியான முடிவை நோக்கி கொண்டு செல்லுமா என்பதுதான் இதன் கதை. வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.