முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி - மறுத்த இயக்குநர்

அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி - மறுத்த இயக்குநர்

அண்ணாமலை போன்று அரசியல் இல்லாத படம் பண்ணலாம் என்றேன் என லிங்குசாமி ரஜினியிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

 • 110

  அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி - மறுத்த இயக்குநர்

  ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. முதல் படத்தை குடும்ப சென்டிமென்ட் படமாக இயக்கியிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 210

  அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி - மறுத்த இயக்குநர்

  அடுத்ததாக அவர் இதுபோன்ற ஒரு கதையைத் தான் இயக்குவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தனது ரன் படத்தில் கமர்ஷியல் விருந்து படைத்தார்.

  MORE
  GALLERIES

 • 310

  அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி - மறுத்த இயக்குநர்

  அதுவரை ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த மாதவனுக்கு ஆக்சன் ஹீரோ இமேஜ் பெற்று தந்த படம் ரன்.

  MORE
  GALLERIES

 • 410

  அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி - மறுத்த இயக்குநர்

  இதற்கடுத்து சண்டக்கோழி, பையா உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார் லிங்குசாமி.

  MORE
  GALLERIES

 • 510

  அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி - மறுத்த இயக்குநர்

  இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு லிங்குசாமி பேட்டியளித்திருந்தார். அதில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து சுவாரசிய சம்பவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 610

  அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி - மறுத்த இயக்குநர்

  அவர் பேசியதாவது, ரன் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், லிங்குசாமியை நேரில் அழைத்து பாராட்டினாராம். குறிப்பாக சப் வே சண்டைக் காட்சியில் மாதவன் ஷட்டரை மூடும் காட்சியை சிலாகித்து பேசினாராம்.

  MORE
  GALLERIES

 • 710

  அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி - மறுத்த இயக்குநர்

  அடுத்த என்ன படம் பண்ண போகிறீர்கள் என்று ரஜினி கேட்க, ஜி படத்தின் கதையை சொல்லியிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 810

  அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி - மறுத்த இயக்குநர்

  இந்தக் கதையில், தான் நடித்தால் எப்படி இருக்கும் என கேட்க, அதற்கு இதில் ஹீரோ கல்லூரி மாணவன். அதனால் உங்களுக்கு இந்தப் படம் சரிவராது என லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 910

  அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி - மறுத்த இயக்குநர்

  மேலும் இந்தக் கதை ஒரு பேக்டரி என வைத்துக்கொள்வோம், அங்கே தேர்தல் நடக்குது. அதில் நான் வெற்றிபெற்று அரசியலில் ஈடுபடுகிறேன் என வைத்துக்கொள்ளலாம் என அவர் கூற நான் மறுத்துவிட்டேன். அண்ணாமலை போன்று அரசியல் இல்லாத படம் பண்ணலாம் என்றேன் என லிங்குசாமி ரஜினியிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 1010

  அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி - மறுத்த இயக்குநர்

  அஜித் - திரிஷா இணைந்து நடித்த ஜி படம் தோல்விப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES