அந்த நேரத்தில், சிவாஜி கணேசன் நாயகனாக நடித்து வந்த என் தங்கை நாடகத்தை திரைப்படமாக எடுக்க அசோகா பிக்சர்ஸ் திட்டமிட்டு எம்ஜிஆரை ஒப்பந்தம் செய்திருந்தனர். எம்ஜிஆரின் கண் தெரியாத தங்கையாக நடிக்க ஆள் தேடிக் கொண்டிருந்தவர்கள், சரோஜாவின் திறமையால் கவரப்பட்டு மீனா என்ற அந்த தங்கை கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தனர்.