ரசிகர்களை மகிழ்விக்க வரும் செப்டம்பர் மாத ஓடிடி வெளியீடுகள்!
செப்டம்பர் 11 - Tughlaq Durbar - விஜய் சேதுபதி, பார்த்திபன் நடித்திருக்கும் துக்ளக் தர்பார் செப்டம்பர் 10 நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. மறுநாளிலிருந்து நெட்பிளிக்ஸில் படத்தைப் பார்க்கலாம்.
செப்டம்பர் மாதத்தில் முன்னணி ஓடிடி தளங்கள் அதிகளவில் வெப் தொடர்கள், திரைப்படங்களை வெளியிடுகின்றன. அவற்றில் முக்கியமான சில.
2/ 20
நெட்பிளிக்ஸ்: செப்டம்பர் 3 - La Casa De Papel (Money Heist) Part 5: Volume 1 - செப்டம்பர் 3 ஆம் தேதி இன்று மணி ஹெய்ஸ்ட் ஐந்தாவது சீஸனின் முதல் வால்யூம் வெளியாகிறது. உலக அளவில் அதிகம் பேர் பார்த்த வெப் தொடர்களில் இதுவும் ஒன்று.
3/ 20
செப்டம்பர் 7 - On the Verge - யுஎஸ்ஸில் தயாராகியுள்ள புதிய வெப் தொடர். செப்டம்பர் 7 வெளியாகிறது. நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் நான்கு பெண்களின் வாழ்க்கையை பற்றி தொடர்.
4/ 20
செப்டம்பர் 8 - Into the Night: Season 2 - ஒரு விமானம் கடத்தப்படுகிறது. அதேநாளில் உலகம் பேரழிவை சந்திக்கிறது. உயிர் பிழைத்தவர்கள் எப்படி தங்களை காத்துக் கொண்டார்கள் என்பதை சொல்லும் தொடர். இப்போது வெளியாவது இரண்டாவது சீஸன்.
5/ 20
செப்டம்பர் 9 - Blood Brothers: Malcolm X & Muhammad Ali - 20 ஆம் நூற்றாண்டின் இரு முக்கிய ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படம். இருவரும் நிறவெறிக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள். கருப்பின மக்களை உலகம் அதுவரை பார்த்து வந்த பார்வையை மாற்றியவர்கள்.
6/ 20
செப்டம்பர் 10 - Lucifer: The Final Season - லூசிபர் மார்னிங் ஸ்டார் என்பது டிசி காமிக்ஸின் கற்பனை கதாபாத்திரங்களுள் ஒன்று. இதுவரை 5 சீஸன்கள் வெளியாகியுள்ளது. இது கடைசி சீஸன்.
7/ 20
செப்டம்பர் 11 - Tughlaq Durbar - விஜய் சேதுபதி, பார்த்திபன் நடித்திருக்கும் துக்ளக் தர்பார் செப்டம்பர் 10 நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. மறுநாளிலிருந்து நெட்பிளிக்ஸில் படத்தைப் பார்க்கலாம்.
8/ 20
செப்டம்பர் 15 - Crime Stories: India Detectives - பெங்களூரு போலீஸ் நான்கு வெவ்வேறு வழக்குகளை எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறது என்பதை சொல்லும் புதிய வெப் தொடர்.
9/ 20
செப்டம்பர் 17 - Ankahi Kahaniyan - மூன்று கதைகளை கொண்ட ஆந்தாலஜி. அஸ்வினி ஐயர் திவாரி, அபிஷேக் சௌபே, சகத் சௌதாரி இயக்கியுள்ளனர்.
10/ 20
செப்டம்பர் 23 - Kota Factory Season 2 - இந்தியாவில் தயாரான வெற்றிகரமான வெப் தொடர்களில் கோட்டா பேக்டரியும் ஒன்று. வரும் 23 ஆம் தேதி இரண்டாவது சீஸன் வெளியாகிறது.
11/ 20
அமேசான் பிரைம் வீடியோ: செப்டம்பர் 3 - Cinderella - சின்ட்ரல்லா கதையை பலர் படமாக்கியிருக்கிறhர்கள். இன்னும் பலர் படமாக்குவார்கள். . இது அதன் நவீன வடிவம்.
12/ 20
Mumbai Diaries 26/11 - இன்று வெளியாகியிருக்கும் மற்றொரு படைப்பு. மும்பை தீவிரவாத தாக்குதல் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.
13/ 20
செப்டம்பர் 10 - Tuck Jagdish - நானியின் புதிய படம். சென்ற வருடம் ஓடிடியில் வெளியான V தோல்வியடைந்த நிலையில் இந்தப் படம் ரசிகர்களை கவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
14/ 20
டிஸ்னி + ஹாட் ஸ்டார் மல்டிபிளெக்ஸ்: செப்டம்பர் 17 - Bhoot Police - சயிப் அலிகான், அர்ஜுன் கபூர், யாமி கௌதம் நடித்துள்ள ஹாரர் திரைப்படம்.
15/ 20
Maestro - அந்தாதுன் இந்திப் படத்தின் தெலுங்கு ரீமேக்.
16/ 20
Annabelle Sethupathi - விஜய் சேதுபதி, தாப்ஸி நடித்திருக்கும் ஹாரர் காமெடி திரைப்படம்.
17/ 20
டிஸ்னி + ஹாட் ஸ்டார் ப்ரீமியம்: செப்டம்பர் 1 - Dug Days - பிக்சாரின் புதிய அனிமேஷன் திரைப்படம். நேற்று முன்தினம் வெளியானது. குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் படம் கவர்ந்துள்ளது.
18/ 20
செப்டம்பர் 3 - Black Widow - மார்வெலின் மற்றுமொரு சூப்பர் ஹீரோ(யின்) திரைப்படம். ஆக்ஷன் விரும்பிகளுக்குப் பிடிக்கும்.
19/ 20
ஸீ 5: செப்டம்பர் 3 - Helmet - டினோ மரியாவும், சோனி பிக்சர்ஸும் இணைந்து தயாரித்திருக்கும் காமெடி திரைப்படம்.
20/ 20
செப்டம்பர் 10 - Dikkiloona - சந்தனம் நடித்திருக்கும் டிக்கிலோனா நேரடியாக ஓடிடி தளத்தில் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.