பல வருடங்களாக அண்டர் புரொடக்ஷனில் இருக்கும் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
2/ 10
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் தயாராகும் படங்கள் பல வருடங்கள் தயாரிப்பில் இருப்பது வழக்கமானது.
3/ 10
அதேபோல் விக்ரம் நடிப்பில் அவர் தொடங்கிய துருவ நட்சத்திரம் திரைப்படமும் பல வருடங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. அவ்வப்போது படம் குறித்து தகவல்கள் வெளியாகும். ஆனால் அவையெல்லாம் பட வெளியீடு பற்றிய எந்த நம்பிக்கையும் அளித்ததில்லை.
4/ 10
முதல்முறையாக அப்படி நம்பிக்கை அளிக்கும் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
5/ 10
துருவ நட்சத்திரம் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை நடிகர் விக்ரம் தொடங்கியிருக்கிறார்.
6/ 10
இந்தச் செய்தியின் மூலம் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு முழுமையடைந்து இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். கௌதம் படத்தின் இறுதிக்கட்ட பேட்ச்வொர்க்கில் உள்ளார். ஸ்பை த்ரில்லரான இந்தத் திரைப்படத்தில் விக்ரமுடன் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
7/ 10
படத்தின் கதையை கௌதம் வாசுதேவ் மேனனும், தீபக் வெங்கடேசனும் இணைந்து எழுதியுள்ளனர். இதில் நியூயார்க் நகரை சேர்ந்த அண்டர் கவர் ஏஜென்டாக விக்ரம் நடித்துள்ளார்.
8/ 10
ரிது வர்மா, ராதிகா சரத்குமார், பார்த்திபன், விநாயகன், திவ்யதர்ஷினி, வம்சி கிருஷ்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். துருவ நட்சத்திரம் திரையரங்கில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
9/ 10
விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு துருவ நட்சத்திரம் வெளியீடு குறித்த தகவலை கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் உள்ளனர்.