துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி விட்னஸ் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. ஸ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரோகிணி ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை தீபக் என்ற இயக்குனர் இயக்கி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் முதல் தோற்ற படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கொரோனா காலத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி அவர்களது வாழ்வாதாரத்தை ஏற்படும் சிரமங்கள் உள்ளிட்ட காரணங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
சபரி-கிரிஷ் என்ற இரட்டையர் இணையின் இயக்கத்தில், கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் புதிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மே 6ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது
பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் ஒரே டேக்கில் படமாக்கப்பட்ட திரைப்படமாக உருவாகி உள்ளதால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த திரைப்படத்தின் டீசர் அறிமுக விழாவில் படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் பார்த்திபனுடன் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு நடிகர் சமுத்திரகனி இயக்குனர் எழில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஜெய், சுந்தர்சி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தின் முன்னேற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆக்சன் த்ரில்லராக உருவாகி உள்ளது. நடிகை குஷ்பூ தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ஜெய் வில்லனாகவும் சுந்தர்சி நாயகனாகவும் நடித்துள்ளார்.