தற்காப்புக் கலை மன்னன் நடிகர் புரூஸ் லீ பற்றிய அரிய தகவல்கள்
நாள்தோறும் 5 ஆயிரம் பன்ச்களை பயிற்சி எடுப்பாராம் புரூஸ் லீ. தற்காப்பு கலையில் மன்னனாக இருந்தும் கையில் துப்பாக்கி ஒன்றை எப்போதும் புரூஸ் லீ வைத்திருப்பார்.
தற்காப்பு கலையில் மட்டும்தான் புரூஸ் லீ வல்லவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடனத்திலும், அவர் சாம்பியன் பட்டத்தை பெற்றிருக்கிறார்.
2/ 12
அமெரிக்காவுக்கு குடி பெயர்வதற்கு முன்பாக ஹாங்காங்கில் குழந்தை நட்சத்திரமாக 20 படங்களில் நடித்திருக்கிறார்.
3/ 12
புரூஸ் லீயின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் ஹேர் ஸ்டைலிஸ்ட் செப்ரிங் ஆவார்.
4/ 12
செப்ரிங்கின் பரிந்துரையின்பேரில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான வில்லியம் டோஸியரின் நட்பு புரூஸ் லீக்கு கிடைத்தது.
5/ 12
புரூஸ் லீக்கு கண் பார்வை பிரச்னை இருந்துள்ளது. இதனால் அவர் பெரிய கண்ணாடிகளை அணிந்திருக்கிறார். முதன் முறையாக கான்டேக்ட் லென்ஸை பயன்படுத்தியவர் புரூஸ் லீ என்றும் சொல்லலாம்.
6/ 12
அமெரிக்காவில் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியை தொடங்கும்போது புரூஸ் லீக்கு நடிகராகும் எண்ணம் கிடையாது.
7/ 12
1963ல் தன்னிடம் தற்காப்பு கலைகளை கற்க வந்த லிண்டா எமெரி என்ற பெண்ணை காதலித்து திருமணம முடித்தார் புரூஸ் லீ.
8/ 12
தற்காப்பு கலையில் பல நுணுக்கங்களை அறிமுகப்படுத்தியவராக பாராட்டப்படுகிறார் புரூஸ் லீ. அவர் அறிமுகப்படுத்திய யுக்திகள் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது.
9/ 12
நாள்தோறும் 5 ஆயிரம் பன்ச்களை பயிற்சி எடுப்பாராம் புரூஸ் லீ.
10/ 12
தற்காப்பு கலையில் மன்னனாக இருந்தும் கையில் துப்பாக்கி ஒன்றை எப்போதும் புரூஸ் லீ வைத்திருப்பார்.
11/ 12
புரூஸ் லீ வீட்டில் பெரிய நூலகம் உண்டு. அதில் குறைந்தது 2 ஆயிரம் புத்தகங்கள் இருக்கும்.
12/ 12
மல்டி டாஸ்கிங் செய்வதில் ஆர்வம் கொண்ட புரூஸ்லீ ஒரே நேரத்தில் டம்பெள்ஸால் பயிற்சி எடுத்துக் கொண்டு, புத்தகத்தை படித்தவாறு, டிவியும் பார்ப்பாராம்.