தெலுங்கு முன்னணி நடிகர் மற்றும் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனரின் படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்று வருவதால் கீர்த்திக்கு வாய்ப்பு குவிந்து வருகிறது.
2/ 10
2000-ல் வெளியான பைலட்ஸ் என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் கீர்த்தி சுரேஷ்.
3/ 10
தமிழில் 2015-ல் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அவர் அறிமுகமானார். சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ, தனுஷுடன் தொடரி உள்ளிட்ட படங்களில் கீர்த்தி நடித்துள்ளார்.
4/ 10
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
5/ 10
தமிழில் அடுத்ததாக உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்குகிறார்.
6/ 10
செல்வராகவனுடன் கீர்த்தி இணைந்து நடித்து கடந்த வாரம் ஓடிடியில் வெளியான சாணி காயிதம் திரைப்படம் கீர்த்தி சுரேஷூக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
7/ 10
தெலுங்கு உச்ச நட்சத்திரம் மகேஷ் பாபுவுடன் நடித்துள்ள 'சர்காரு வாரி பாட்டா' திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற கலாவதி பாடல் மெகா ஹிட்டாகியுள்ளது.
8/ 10
இந்நிலையில் தெலுங்கு மெகா பவர்ஸ்டார் ராம் சரண் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றுள்ளார்.
9/ 10
2 வேடங்களில் ராம் சரண் நடிக்கும் இந்த படத்தில் ஒருவருக்கு கியாரா அத்வானியும், இன்னொருவருக்கு கீர்த்தி சுரேஷும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
10/ 10
தளபதி 66 படத்தை தயாரிக்கும் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. பெயரிடப்படாத இந்த படத்திற்கு RC 15 என ஒர்க்கிங் டைட்டில் வைத்துள்ளனர்.