நடிகை கீர்த்தி சுரேஷ், தான் வெட்டிங் கவுனில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். தவிர தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்துள்ளார். அதோடு பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை வென்றார். தற்போது தான் வெட்டிங் கவுனில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.