இவரது தந்தை சுரேஷ் குமார். மலையாளி. 1978-ல் திரஞோட்டம் படத்தில் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். 1982 முதல் படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். பூச்சைக்கொரு மூக்குத்தி, ஆறாம் தம்புரான் உள்பட மலையாளத்தின் முக்கிய படங்கள் இவர் தயாரித்தது. 30-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். இவர் தமிழ், மலையாளத்தில் பிரபலமாக இருந்த நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
சுரேஷ் குமாரின் மனைவியின் பெயரை - அதாவது படத்தில் இருக்கும் சிறுமியின் தாயின் பெயரைச் சொன்னால் சிறுமி யார் என்பதை கண்டுபிடித்து விடலாம். அவர் நடிகை மேனகா. எண்பதுகளின் தொடக்கத்தில் நடிக்க ஆரம்பித்து எண்பதுகளின் இறுதிவரை 130 க்கும் மேற்பட்ட படங்களில் மேனகா நடித்தார். மலையாளியாக இருந்தும் அவர் சினிமாவில் அறிமுகமானது ராமாயி வயசுக்கு வந்திட்டா என்ற தமிழ்ப் படத்தில். அதன் பிறகு மலையாளத்தில் அதிக படங்களில் நடித்தார். தமிழில் கீழ்வானம் சிவக்கும், நீதிபதி போன்ற படங்களில் சிவாஜியுடன் நடித்தார். ஓம் சக்தி படத்தில் விஜயகாந்துடன் நடித்தார். கலைஞர் வசனம் எழுதிய தூக்குமேடை படத்தில் சந்திரசேகருடன் நடித்தார். அதேபோல் நெற்றிக்கண் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார்.