நடிகர் விஜய் சேதுபதியுடன் தான் நடிக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் ஒத்திகையில் எடுக்கப்பட்ட படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை கத்ரீனா கைஃப்.
2/ 9
அந்தாதுன் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது இரண்டாவது இந்தி படத்தில், பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடிப்பது அனைவரும் அறிந்ததே.
3/ 9
'மெர்ரி கிறிஸ்துமஸ்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கிய நிலையில், இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
4/ 9
தற்போது ஒத்திகையில் நடிகை கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனுடன் எடுத்துக் கொண்ட படங்களை பகிர்ந்துள்ளார்.
5/ 9
கிறிஸ்துமஸ் இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகும் என கூறப்படுகிறது.
6/ 9
பாடல்கள் ஏதும் இல்லாமல் தொண்ணூறு நிமிட படமாக உருவாகும் இத்திரைப்படம் மும்பை, புனே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படுகிறது.
7/ 9
இப்படம் டிசம்பர் 22, 2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8/ 9
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த விஜய் சேதுபதி, இந்தி ரசிகர்களையும் கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.