

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை கஸ்தூரி, அரசியல், அன்றாடம் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை ட்வீட் செய்து வருகிறார்.


கஸ்தூரி பிரபுவுடன் நடித்த பழைய திரைப்பட வீடியோவை குறிப்பிட்டு அஜித் ரசிகர் என்ற அடையாளத்துடன் நெட்டிசன் ஒருவர் கஸ்தூரியை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார்.


நெட்டிசனின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்திருக்கும் கஸ்தூரி, “எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் சார் கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதில் காமெடி என்னன்னா, கஸ்தூரி அஜித்தைவிட 5 வயது குறைவானவர். ஹய்யோ, ஹய்யோ” என்று கூறியுள்ளார்.


கஸ்தூரியின் மற்றொரு ட்விட்டர் பதிவில், போயி வேற வேலை இருந்தா பாருங்கடா. உங்களை மாதிரியான அஜித் ரசிகர்களால், மரியாதைக்குரிய அஜித் ரசிகர்களுக்கும் சேர்த்து கெட்ட பேரு. அதை புரியற அளவுக்காவது அறிவிருக்கா, இல்லையா? என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கடைசியாக கஸ்தூரி, “இந்த வாய்ப்பை பயன்படுத்தி அஜித்குமாரின் புகழைக் கெடுக்க வேண்டாம். அவர் ஒரு சரியான ஜென்டில்மேன். அவரை நான் அதிகம் ரசிக்கிறேன். அவரது ரசிகராக இருக்க பெருமைப்படும் ரசிகர்கள், அவர் உங்களை நினைத்து பெருமைப்படும்படி செய்யுங்கள். இதுபோன்ற தரம்கெட்ட விஷயங்களை செய்யாதீர்கள்” என கஸ்தூரி அஜித் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.