இந்தப் படம் கார்த்தியின் தனிப்பட்ட மைல்கல். மணிரத்னத்திற்கு உதவியாளராக இருந்து அவரின் படத்தில் முன்னணி நட்சத்திரமாக மாறியது வரை, இந்த படத்தின் மூலம் கார்த்தியின் திரை வாழ்க்கை முழுமை அடைந்தது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட மிக அழகான திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இருப்பினும், பல சிறந்த படைப்புகளைப் போலவே, இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படத்தில் போலீசை காப்பாற்றும் கைதியாக நடித்திருந்தார் கார்த்தி. இந்தப் படத்தில் கார்த்தியின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. தனது ரசிகர்களுக்கான படத்தைத் தரும் மாஸ் ஹீரோவாகவும், ஆண்டுகள் கடந்தும் படத்தின் கதையைப் பேசும் கிளாஸ் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் தனித்து விளங்குகிறார் கார்த்தி. அப்பா, அண்ணன் என தனக்கு முன்னோடியாக குடும்பத்தில் இருவர் இருந்தும், தனித்தன்மையுடன் இருப்பது கார்த்தியின் சிறப்பு. அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!