மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி புனித் ராஜ் குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். அரசு மரியாதையுடன் கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த புனித் ராஜ்குமார் தனது 46வது வயதில் கடந்த அக்டோபர் 29-ம்தேதி மாரடைப்பால் காலமானார். அப்பு என்று அன்புடன் அழைக்கப்படும் புனித், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி நெறியாளர் என பல திறமைகளையும் கொண்டவர். இளம் வயதில் புனித் ராஜ்குமார் காலமானது கன்னடம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் ஆவார். புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு கோலிவுட் முன்னணி நடிகர்களும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். புனித்துக்கு அஷ்வினி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.