விஜயநகர பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் மந்திரிசபையை அலங்கரித்த விகடகவி தெனாலிராமனின் கதைகள் புகழ்பெற்றவை. குழந்தைகள் தங்களது வாசிப்பை தொடங்க தொனாலிராமன் கதைகள் பொருத்தமான தேர்வு. சினிமா பேசத் தொடங்கிய சில வருடங்களிலேயே - அதாவது 1938 லேயே தெனாலிராமன் கதைகளை திரைப்படமாக எடுத்தனர். அதன் பிறகு 1958 இல் சிவாஜி கணேசன் தெனாலிராமனாக நடிக்க தெனாலிராமன் என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது.
பி.எஸ்.ரங்கா தெனாலிராமன் கதையை படமாக்க விரும்பினார். அதேநேரம் 1941 இல் தெலுங்கில் வெளியான தெனாலிராமன் திரைப்படத்திதிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டும் என நினைத்தார். வெங்கடராமையா கன்னடத்தில் நடத்தி வந்த தெனாலி ராமகிருஷ்ணா நாடகத்தை தழுவி தனது திரைப்படத்தை எடுக்க முடிவு செய்து, திரைக்கதை எழுதும் பொறுப்பை கண்ணதாசன் உள்பட மூவரிடம் ஒப்படைத்தார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை எடுத்தார் பி.எஸ்.ரங்கா.

தமிழில் தெனாலிராமனாக சிவாஜி கணேசன் நடிக்க, தெலுங்கில் அக்னியேனி நாகேஸ்வரராவ் தெனாலிராமனாக நடித்தார். கிருஷ்ணதேவராயராக இரு மொழிகளிலும் என்டி ராமராவ் நடிக்க, ராஜகுருவாக தமிழில் நம்பியாரும், தெலுங்கில் முக்கமலா கிருஷ்ணமூர்த்தியும் நடித்தனர். நாயகிகளாக பானுமதி, ஜமுனா நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி படத்துக்கு இசையமைத்தனர். சின்னதும் பெரிதுமாக 21 பாடல்கள் படத்தில் இடம்பெற்றது. இதில் பெரும்பாலான பாடல்களை கண்ணதாசன் எழுத, ஆத்மநாதனின் இரு பாடல்களும் படத்தில் பயன்படுத்தப்பட்டன. இவர்களுடன் தமிழ் மன்னன் என்ற பாடலாசிரியரும் ஒரு பாடல் எழுதியிருந்தார்.
பி.எஸ்.ரங்கா தெனாலிராமன் கதையை படமாக்க விரும்பினார். அதேநேரம் 1941 இல் தெலுங்கில் வெளியான தெனாலிராமன் திரைப்படத்திதிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டும் என நினைத்தார். வெங்கடராமையா கன்னடத்தில் நடத்தி வந்த தெனாலி ராமகிருஷ்ணா நாடகத்தை தழுவி தனது திரைப்படத்தை எடுக்க முடிவு செய்து, திரைக்கதை எழுதும் பொறுப்பை கண்ணதாசன் உள்பட மூவரிடம் ஒப்படைத்தார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை எடுத்தார் பி.எஸ்.ரங்கா.
அந்தப் பாடலை எழுதியவர் கண்ணதாசன். அப்போது அவர் திமுக வில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஆத்திகம் பேசினால் தலைவர்களாக இருந்தாலும் விமர்சித்து வியர்வை வர வைத்துவிடுவார்கள். தெனாலிராமன் படத்தில், 'உல்லாசம் தேடும் எல்லோரும் ஒருநாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம்..' என்ற பாடலை அவர் எழுதினார். ஆத்திகப் பாடலான அது தனது பெயரில் வந்தால் விமர்சிக்கப்படுவோம் என சொந்தப் பெயரை தவிர்த்து தமிழ் மன்னன் என்ற புனைப்பெயரில் அதனை எழுதினார்.
பிறகு அவர் திமுகவிலிருந்து விலகி பல கட்சிகள் கண்டதும், கடவுள் மறுப்பாளராக இருந்து ஆன்மிகத்தை நாடிச் சென்று நாத்திகத்தை விமர்சித்ததும் வரலாறு. ஆனால், ஆரம்பத்தில் கொள்கைக்கு பயந்து புனைப்பெயரில் பாடல் எழுதிய சம்பவமும் நடந்திருக்கிறது. ஆனால், திரைப்படத்தில் வசனம் - பாட்டு என கண்ணதாசன் மற்றும் ஆத்மநாதன் பெயர்கள் மட்டும்தான் இடம்பெற்றிருக்கும்.