நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி 2 மேக்கப் ரூமில் எடுத்த படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தாம்தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவியில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். தற்போது சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். பி.வாசு இயக்கும் இந்தப் படத்தை, லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தின் மேக்கப் ரூமில் எடுத்த படங்களை கங்கனா ரனாவத், தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஆனால் அந்தப் படங்களில் அவரின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. தலைக்கு மேல் செய்யப்பட்டுள்ள அலங்காரம் மட்டுமே தெரிகிறது.