1985 இல் இந்தியில் சன்னி தியோல் நடிப்பில் அர்ஜுன் என்ற படம் வெளியானது. சமூக அவலங்களின் மீது அதிருப்தி கொண்ட, கோபக்கார இளைஞன் பிம்பத்தை முன்வைத்து கதைகளை உருவாக்கியவர்கள் சலீம் - ஜாவெத் திரைக்கதையாசிரியர்கள். இவர்களின் கதையில் நடித்தது அமிதாப்பச்சனின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. இந்த இருவரில் ஜாவெத் அக்தரின் எழுத்தில், ராகுல் ரவைல் இயக்கத்தில் வெளியானதுதான் அர்ஜுன் திரைப்படம்.
அர்ஜுனின் நண்பர்களும் அவரைப் போலவே வேலை இல்லாதவர்கள். தங்களது ஏரியாவில் நடக்கும் சின்னச் சின்ன தவறுகளை தட்டிக் கேட்கும் அர்ஜுனும், அவனது நண்பர்களும் லோக்கல் தாதாவின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார்கள். தாதாவுக்கு பலமாக இருப்பது ஒரு மினிஸ்டர். அர்ஜுன் எதிர்க்கட்சித் தலைவருக்காக வேலை செய்கிறான் என்ற சந்தேகம் அமைச்சருக்கு. அவரது ஆள்கள் அர்ஜுனின் ஒரு நண்பனை கொன்று விடுகிறார்கள்.
தேர்தல் நெருங்குகையில் எதிர்க்கட்சி தலைவர் அர்ஜுனை தேடி வருகிறார். அர்ஜுன் அவருடன் இணைந்து, மினிஸ்டருக்கு எதிரான ஆவணங்களை எடுத்து வருகிறான். மினிஸ்டரின் குற்றங்கள் அம்பலப்படும் என்று பார்த்தால், எதிர்க்கட்சி தலைவர் மினிஸ்டருக்கு எதிரான ஆதாரங்களை வைத்து மிரட்டி, மினிஸ்டரின் ஆதரவுடன் வேட்பாளராக வந்து நிற்கிறார். இந்த கூட்டுச் சதியை அர்ஜுன் முறியடிப்பதுதான் படத்தின் கதை.
கமல் அதனை மாற்றினார். ஒட்ட வெட்டிய தலைமுடி, குறுந்தாடி, கையில் காப்பு என்று அவரது கோபத்தை வெளிப்படுத்தும்விதமாக தனது தோற்றத்தை மாற்றினார். தங்கையின் தாவணியை எடுத்துச் சென்ற ரவுடிகளை துவசம் செய்துவிட்டு கடைசி பஞ்சாக, கையில் போட்டிருக்கும் வளையத்தை கழற்றி அவர் அடிக்கையில் தியேட்டர் விசில் சத்தத்தில் நிறையும்.
சத்யா படத்தில் கமலின் கெட்டப்பும், அவர் கையில் அணிந்திருந்த காப்பும் அன்றைய இளைஞர்களின் பேஷனானது. சத்யாவில் ஈர்க்கப்பட்ட பல்லாயிரம் இளைஞர்களில் ஒருவர்தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன். அவரே இதனை பேட்டிகளில் கூறியிருக்கிறார். இன்னொருவர் லோகேஷ் கனகராஜ். விஜய் 67 போஸ்டரில் அவரும், விஜய்யும் கையில் வைத்திருக்கும் வளையம் சத்யா படத்தின் குறியீடு. அதுபோல் ஒரு படம் இன்றைய நடிகர்களுக்கு அமைந்தால் அதைவிட அதிர்ஷ்டம் வேறில்லை.