முகப்பு » புகைப்பட செய்தி » 37 வருடங்களுக்கு முன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலின் இந்திப் படம்

37 வருடங்களுக்கு முன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலின் இந்திப் படம்

ஷோலே படத்திற்குப் பிறகு அதுபோல் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக சாகர் திரைப்படத்தை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். சாகர் திரைப்படம் அதுவரை வெளியான அனைத்து இந்திப் படங்களின் வசூலையும் முறியடித்து இன்டஸ்ட்ரி ஹிட் என்ற சாதனையை படைத்தது.

 • News18
 • 16

  37 வருடங்களுக்கு முன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலின் இந்திப் படம்

  வருடா வருடம் இந்தியா சார்பில் ஒரு படம் ஆஸ்கரின், சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருதுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும். நடிகர்களில் கமல் நடித்தப் படங்களே அதிகமுறை இந்த விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 1985 இல் கமல் நடித்த பிளாக் பஸ்டர் இந்திப் படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 26

  37 வருடங்களுக்கு முன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலின் இந்திப் படம்

  எண்பதுகளில் கமல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் நடித்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒப்புக்கு தலைகாட்டுவதல்ல. இந்த ஐந்து மொழிகளிலும் தொடர்ச்சியாக வெள்ளிவிழா படங்கள் தந்துள்ளார். இந்திய அளவில் அன்றும் என்றும் அப்படியொரு ஹிட் தந்தவர் கமல் மட்டுமே.

  MORE
  GALLERIES

 • 36

  37 வருடங்களுக்கு முன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலின் இந்திப் படம்

  1981 இல் பாலசந்தர் தனது கன்னடப் படம் மரேசரித்திராவை இந்தியில் கமல் நடிப்பில் ஏக் துஜ கே லியே என்ற பெயரில் எடுத்தார். படம் பம்பர்ஹிட்டாக ஓடி வெள்ளிவிழா கண்டது. அந்த வருடத்தின் அதிகம் வசூல் செய்த இந்திப் படம் என்ற பெருமையும் அதற்கு கிடைத்தது. அதற்கு அடுத்த வருடம் 1982 இல் கமல் நடிப்பில் சனம் தெரி  கசம் இந்திப் படம் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்தப் படமும் 175 நாள்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. 1983 இல் சத்மா வெளியானது. மூன்றாம்பிறை படத்தின் இந்தி ரீமேக்கான இது வசூலுடன் விமர்சனரீதியான பாராட்டையும் பெற்றது. 1984 இல் அபூர்வராகங்களின் ரீமேக் உள்பட நான்கு இந்திப் படங்களில் கமல் நடித்தார். 1985 இல் சாகர் திரைப்படம் வெளியானது.

  MORE
  GALLERIES

 • 46

  37 வருடங்களுக்கு முன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலின் இந்திப் படம்

  ரமேஷ் சிப்பி இயக்கத்தில் கமல், ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா நடித்திருந்த இந்தப் படத்தின் திரைக்கதையை ஜாவத் அக்தர் எழுதியிருந்தார். ஆர்.டி.பர்மன் இசை. கோவாவை களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த காதல் கதைக்கு ஆர்.டி.பர்மனின் இசையும், பாடல்களும் பெரும் பங்களிப்பை செய்தன. படம் பம்பர்ஹிட்டாகி 175 நாள்களுக்கு மேல் ஓடி சாதனைப் படைத்தது.

  MORE
  GALLERIES

 • 56

  37 வருடங்களுக்கு முன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலின் இந்திப் படம்

  இந்தப் படத்தில் நடித்ததற்காக கமல் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் என இருபிரிவுகளில் ஃபிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஒரு நடிகர் ஒரே படத்திற்காக இரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது அதற்கு முன் ஒரேமுறைதான் நடந்தது. 1968 இல் ஆசீர்வாத் திரைப்படத்துக்காக அசோக்குமார் இப்படி இரு பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு சாகர் படத்தில் அந்த சாதனையை கமல் நிகழ்த்தினார். இறுதியில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது அவருக்கு கிடைத்தது.

  MORE
  GALLERIES

 • 66

  37 வருடங்களுக்கு முன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலின் இந்திப் படம்

  ஷோலே படத்திற்குப் பிறகு அதுபோல் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக சாகர் திரைப்படத்தை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். சாகர் திரைப்படம் அதுவரை வெளியான அனைத்து இந்திப் படங்களின் வசூலையும் முறியடித்து இன்டஸ்ட்ரி ஹிட் என்ற சாதனையை படைத்தது. அந்த வருடம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் சாகர் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தேர்வாகவில்லை. 1985 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 9 வெளியான சாகர் திரைப்படம் இன்று 37 வருடங்களை நிறைவு செய்கிறது.

  MORE
  GALLERIES