கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் முதல் பாடல் மே 11-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட உள்ளது மேலும் வெளிநாடுகளிலும் மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தமிழில் நடிகை சன்னி லியோன் நடிக்கும் ஓ மை கோஸ்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது அடுத்து இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். யுவன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் சதீஷ் தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இவர்களது கதாபாத்திரங்களை தற்போது படக்குழுவினர் அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளனர்
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி முதல்முறையாக பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். நாசர் தலைமையிலான பாண்டவர் அணி சமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்றது இதை அடுத்து முதல் பொதுக்குழு கூட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற நாசர் பொதுச்செயலர் பதவியில் வெற்றி பெற்ற விஷால் பொருளாளர் பதவியில் வெற்றிபெற்ற கார்த்தி மற்றும் துணை தலைவர்களான பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியவர்களோடு பொதுக்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து நடிகர்களும் பங்கேற்றனர்.
சிபி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள DON திரைப் படத்திற்கு யூ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இந்த சான்றிதழை படக்குழுவிற்கு தணிக்கைக்குழு வழங்கியுள்ளது பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை சமுத்திரக்கனி எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மே மாதம் 13ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது
லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வரும் வாரியர் திரைப் படத்தின் முன்னோட்டத்தை மே 14-ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வந்த லிங்குசாமி தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனி நடிப்பில் வாரியர் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். டிஎஸ்பி இசையில் ஏற்கனவே இந்த திரைப்படத்தில் இருந்து சிம்பு பாடிய புல்லட் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது
பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகிவரும் ஜே பேபி என்ற திரைப்படத்தில் இருந்து பாடலொன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நெடுமரம் எனத் துவங்கும் இந்த பாடல் பிரதீப் குரலில் உருவாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் தினேஷ், ஊர்வசி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்