ஹீரா நடித்த சின்ன வேடத்தில் அஸ்வினி பவேயும், ஜெமினி கணேசன் வேடத்தில் அம்ரிஷ் பூரியும், டெல்லி கணேசின் வேடத்தில் ஓம்பூரியும், மணிவண்ணன் வேடத்தில் பரேஷ் ராவலும் நடிப்பதென முடிவானது. முஸ்லீம் சமையல்காரன் வேடத்தை நாசரே இந்தியிலும் செய்தார். படத்தை இயக்கும் பொறுப்பு விளம்பரப்பட இயக்குனர் சாந்தனு சியோரேயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தப் படத்திற்கு முதலில் சிக்னி சாச்சி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இயக்குனர் மாறியதும் ஸ்த்ரீ 420 என பெயர் மாறியது. அத்துடன் ஹீராவின் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த அஸ்வினியை மாற்றி ஆயிஷா ஜுல்காவை ஒப்பந்தம் செய்தார் கமல். படம் 1997 டிசம்பர் 19 வெளியான போது படத்தின் பெயர் சாச்சி 420 என மாறியிருந்தது.
இவரது நிஜப்பெயர் பக்ருதீன் ஜமாலுதீன் காஸி. ஐம்பதுகளிலிருந்து சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த இவர் 300 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார். அதிகமும் குடிகார வேடம். அதனால், நிஜப்பெயர் மறைந்து, மேடைப்பெயரான ஜானி வாக்கர் நிலைத்தது. படத்தில் குடிகாரராக நடித்தாலும் ஜானி வாக்கர் நிஜத்தில் டீ கூட குடிக்காத டீடோட்லராம்.